Adani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி பெரும் தொகையை, லஞ்சமாக கொடுத்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.சோலார் திட்டங்கள் தொடர்பாக லஞ்சம் கைமாறியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் நரேந்திர மோடி ஆகிய இருவரும், நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய 22வது பணக்காரர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ஆவார்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை  இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனம், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலமாக, பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் திரட்டியதாக  புகார் எழுந்துள்ளது.

பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அதானி தரப்பு ஒரு விரிவான திட்டத்தைத் திட்டமிட்டனர்" என்று நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் பிரியன் பீஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார். அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருக்கலாம் என்றும், அந்த நிறுவனத்தின் நிறுவனர் அதானியின் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் நீதிமன்ற பதிவுகளின்படி, கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளார்.  அந்த வாரண்டுகளை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைக்க வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.  இந்த வழக்கு, அமெரிக்க லஞ்ச ஒழிப்புச் சட்டமான, வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola