Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
நடிகை மீனா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீனாவுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் பேபி மீனாவாக அறிமுகமானவர் பின்பு எஜமான் படத்தில் ரஜினிக்கே ஜோடியாகி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். ரஜினி கமல் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அம்மாவை போல மகளும் 4 வயதில் விஜய்யின் தெறி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் கணவர் வித்யாசாகர் உயிரிழக்க உடைந்து போன மீனா தற்போது தான் பேக் டூ ட்ராக் வந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கம்பேக் கொடுத்துள்ளார் மீனா.
சினிமா துறை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளை கடந்த நிலையில், குழந்தையின் வருங்கால நலன் கருதி அரசியலில் எண்ட்ரி கொடுக்க முடிவு செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. மேலும் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் வீட்டு பொங்கல் விழாவில் மீனா பங்கேற்றார்.தென்னிந்திய திரை பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். குஷ்பூ, ராதிகா சரத்குமார் ஏற்கனவே பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில்அந்த வரிசையில் மீனாவும் பாஜகவுக்கு தான் செல்லவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த செய்திகளுக்கு மீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும், தற்போது மீண்டும் மீனா டெல்லி விஜயம் சென்றுள்ளது அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. அதுவும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார் மீனா. மேலும் சில முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மீனா விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.