Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
நடிகர் கார்த்தி 2026-ல் அரசியலில் குத்திக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியான நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
2006ல் சரணாலயம் அமைத்து பெரும் கூட்டம் திரட்டி அதிமுக, திமுகவை மிரள வைத்த நவரச நாயகன்' கார்த்திக் அகில இந்திய பார்வர்டு பிளாக்கில் Forward Bloc-ல் இணைந்தார். 2006ல் அதிமுகவுடன் கூட்டணி பேசப் போய், ஜெயலலிதாவால் அவமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. கோபத்தில் கூட்டணியை முறித்து, 60 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். பின் தேர்தலில் பிரச்சாரத்திற்கு போகாமல், தனக்குப் வயிற்று வலி எனச் சொல்லி கேசட்டை போடச் சொன்னார். இந்தநிலையில் அவர் நிர்வாகிகளால் நீக்கப்பட்டார். பின் 2008ல் அகில இந்திய நாடாளுமன்ற மக்கள் கட்சியைத் தொடங்கினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகரில் 17,336 வாக்குகள் பெற்று, வைகோவின் தோல்விக்கு ஒரு காரணமாகப் பேசப்பட்டார். 2011ல் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி பேச, ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வந்து, முழு நிலவைப் போல ஜொலிக்கிறார் எனப் புகழ்ந்தார்.
அதன் பின் தொகுதி கிடைக்காததால், திமுகவுக்கு ஆதரவு என அறிவித்தார். 2016ல் விடியல் கூட்டணி என அமைத்தார். அது ஒரே வாரத்தில் உடைந்து சிங்க கூட்டணி ஆனது. கார்த்திக் சீரியஸான அரசியல்வாதி அல்ல, விளையாட்டுத்தனமாக இருக்கிறார். போனில் கூட பேச முடியாது என சொல்கிறார் என்று கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி விலகின. கட்சியை கலைத்துவிட்டு மனித உரிமை காக்கும் கட்சியைத் தொடங்கினார். 2019 மற்றும் 2021ல் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.
தற்போது விஜய் அரசியல் களத்தில் களத்தில் குதித்துள்ள நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நவரச நாயகன் கார்த்தி தவெகவுக்கு ஆதரவாக பேச வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் நவரச நாயகன் கார்த்தி 2026 அரசியலில் குத்திக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.





















