Aadhav Join TVK IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்
2026 சட்டமன்ற தேர்தலுக்குள் தவெக ஐடிவிங்கை, ஆதவ் அர்ஜூனா பலப்படுத்தி அதன் மூலம் சீட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆதவ் அர்ஜூனா கணக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்த ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடை நீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இடை நீக்க அறிவிப்பிற்கு பின்னர் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட கடிதம் வந்த போது எப்படி இருந்ததோ அதே உணர்வுடன் தான் இடை நீக்கத்தையும் எதிர்கொள்கிறேன் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.
அதே நேரம் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை காரணத்திற்காகத்தான் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதவ் அர்ஜூனாவோ திமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில் தான் கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கும் 2024 தேர்தலில் விசிகவுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்த குழுவிலிருந்த ஆதவ், வரும் 2026இல் விஜய்க்கு வேலை செய்வதற்காகத் திட்டங்களை வகுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்காகப் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள். விசிகவை தவெக பக்கம் இழுத்து வந்து அப்படியே அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் வியூகத்தைத் திட்டமிட்டிருந்த அவருக்கு விசிக விஜய் பக்கம் வராது என தெரிந்த பிறகும் அங்கே தொடர வாய்ப்பு இல்லை.இதே திமுக கூட்டணியில் விசிக இருந்தால், ஆதவ் அர்ஜுனாவுக்கு 2026 தேர்தலில் சீட்டுக் கிடைக்காது. ஆகவே, அவர் விஜய் ஐடி விங்கை பலப்படுத்தி அதன் மூலம் சீட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்றும் ஒரு கணக்கைப் போட்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.
ஆக, அதை எல்லாம் உணர்ந்தே அவர் தவெக பக்கம் தலித் வாக்குகளை இழுக்க தலித் முதல்வர், தலித் மக்கள் உரிமை என்று சொல்கிறார். அதன் மூலம் விசிக தலித் வாக்குகளில் கொஞ்சம் விஜய் பக்கம் செல்ல வியூகம் அமைக்கிறார்.
எனவே ஆதவ் அர்ஜூனாவின்ன் வாய்ஸ் ஆப் காமன் தமிழகம் முழுக்க ஒரு இயக்கமாக மாற உள்ளது. கூடவே தவெக ஐடி விங்கை எடுத்து நடத்த இருக்கிறது என்கிறார்கள். விரைவில் தவெகவின் பொருளாளராக ஆதவ் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். தவெக பக்கம் ஆதவ் அர்ஜுனா சென்றால், திமுகவுக்கு அது பெரிய தலைவலியாக மாறும் என்று கூறப்படுகிறது.