VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு
ஒரு பக்கம் ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக எதிர்க்க..இன்னொரு பக்கம் விசிக மூத்த நிர்வாகிகள் ஆதவுக்கு எதிராக கொடி பிடிக்க..நடுவில் சிக்கித் தவிக்கும் திருமா முடிவெடுக்க முடியாமல் தின்றி வரும் நிலையில், இதே நிலை நீடித்தால் திமுக விசிகவில் பிளவு ஏற்படுகிறதோ இல்லையோ விசிகவுக்குள் நிச்சயம் விரிசல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நான்காண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதல்வராக கூடாது என உதயநிதியை தாக்கிப்பேசி கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். உதயநிதியை தாக்கியது மட்டுமின்றி.. விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் போது அவர்களையே நம்பி இருக்கும் சமூகங்கள் முழுமையாக பயனடையும் அதனால் பேசிக்காவை அதிகாரத்தில் பங்கெடுக்க வைப்பது தான் எனது நோக்கம் என்று தெரிவித்தார். இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் நேரடியாக திமுகவை சாடினார் ஆதவ் அர்ச்சனா.
ஆதவின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் மட்டுமில்லாமல் விசிக தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த திமுக எம் பி ஆ ராசா அரசியல் புரிதல் இல்லாமல் பேசிய ஆதவ் மீது விசிக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்மொழிந்தார். இதற்கு ஆதவ் பதிலடி கொடுக்க இந்த பஞ்சாயத்து சூடுபிடிக்க தொடங்கியது.
மேலும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு என பலரும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் மென் ஸ்விட்சை கையில் வைத்திருக்கும் திருமாவோ மௌனம் காத்து வந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒருவழியாக வாய்திறந்த திருமாவளவன், திமுக விசிக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பேசி முடிசெடுக்கப்ப்படும் என மழுப்பினார்.
ஆனால் இங்கு தான் தொடங்கியுள்ளது பிரச்சனை, ஆதவின் பேச்சுக்கு விசிக மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினாலும், மாவட்ட செயலாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அலையே விசி வருகிறது. ஆக மூத்த நிர்வாகிகளை எதிர்த்துக்கொண்டு இடைநிலை தொண்டர்கள் மத்தியில் நல்ல பேரை சம்பாதித்து தனக்கென விசிக வின் ஸ்ட்ராங் பேஸ்மெண்டை ஆதவ் போட்டுவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர்கள் திருமாவிடம் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனராம். கட்சியின் அனைத்து டேட்டாக்களையும் கையில் வைத்துக்கொண்டு, தலைவர் சொல்லிதான் செய்தேன் என உங்கள் பெயரை பயன்படுத்துவது சரியல்ல..என குமுறி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு திருமாவோ தற்போது மாநாடு வேலையில் கவனம் செலுத்துவோம் திசை திரும்ப வேண்டாம்..மாநாடு நல்லபடியா முடியட்டும் இதுபற்றி பேசுவோம் என அவர்களை ஆஃப் செய்து வைத்துள்ளாராம் திருமா.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவால் விசிகவுக்குள் கண்ணுக்குள் தெரியாத விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை திருமா எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஆதவின் பேச்சால் திமுக விசிக கூட்டணியில் தான் பிரச்சனை ஏற்படும் என்றால் தற்போது விசிகவுக்குள்ளேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது திருமாவுக்கு கூடுதல் ப்ரஷரை கொடுத்துள்ளது.