Aadhav Arjuna | விஜய் போட்ட உத்தரவு பல்டி அடித்த ஆதவ்மன்னிப்பு கேட்ட பின்னணி
இபிஎஸ் குறித்து ஒருமையில் பேசியதற்கு ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்ட சூழலில், அவர் மன்னிப்பு கேட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.
தவெக சார்பில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ஆனந்துடன் நடந்த வரும் ஆதவ் அர்ஜூனா தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசி கிண்டல் செய்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.அதோடு அதிமுக - மற்றும் பஜகவினர் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,“அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இபிஎஸ் குறித்து ஒருமையில் பேசியதற்கு ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்ட சூழலில், அவர் மன்னிப்பு கேட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது. அதாவது, அதிமுகவுடன் தவெக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் எப்போது வேண்டுமானாலும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்றும் விஜய் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தலுக்கும் இன்னும் ஒரு வருடம் இருப்பதால் கூட்டணி எப்படி வேண்டுமானலும் மாறாலம், இந்த சமயத்தில் இபிஎஸை- இப்படி பேசியது தவறு என்றும் உடனே மன்னிப்பு கேளுங்கள் என்றும் விஜய் ஆதவிடம் அறிவுருத்தியதாக சொல்கின்றனர்.
விஜயின் அறிவுருத்தலின் பெயரில் தான் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் குறித்து எந்த விமர்சனங்களையும் நிர்வாகிகள் வைக்க வேண்டாம் என்று இபிஎஸ் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.