Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டு

என் கட்சியில் இருக்கும் ஆட்களை வைத்தே என்னை திட்ட சொல்லும் வேலையை திமுக செய்து வருகிறது என்று ஆதவ் அர்ஜூனா திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில், திமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழக அரசியலிலும், திமுக தலைமையிலான கூட்டணியிலும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. காரணம், ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாகவும், திமுக - விசிக கூட்டணியை உடைத்து தவெக உடன் கூட்டணி அமைக்க  முயற்சிப்பதாகவும் பரவலாக பேசப்பட்ட நிலையில், அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக திமுகவினர் கொந்தளித்ததை விட விசிகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளான சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், ரவிக்குமார்,வன்னியரசு ஆகியோர் ஆதவ் அர்ஜூனாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கொந்தளித்தனர். 


திருமாவளவன் கூட கட்சியின் மூத்த நிர்வாகிகளிளுடன் ஆலோசனை செய்த பிறகு ஆதவ் அர்ஜூனாவை இடை நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தான்என் கட்சியில் இருக்கும் ஆட்களை வைத்தே என்னை திட்ட சொல்லும் வேலையை திமுக செய்து வருகிறது என்று ஆதவ் அர்ஜூனா திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், ”திமுகாவிற்கு ஏற்றவாரு பேசக்கூடிய ஒரு பத்து பேரை மீடியா முன் வைத்துக்கொண்டு எனக்குன் எதிராக பேச விடுவது, என் கட்சியில் இருக்கும் ஒரு நாளு பேரை வைத்துக்கொண்டு என்னை திட்டச் சொல்வது போன்ற வேலைகளை திமுக செய்து வருகிறது.

 திமுகாவே ஒன்றும் சொல்லாத போது திமுகவை நீ ஏன் திட்டுகிறாய் என்று அவர்கள் என்னை கேட்கிறார்கள்”என்று ஆதவ் அர்ஜூனா திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். தொடர்ந்து திமுகவிற்கு எதிராக களமாடி வரும் ஆதவ் அர்ஜூனா திமுகவே தனக்கு எதிராக தன் கட்சியிலேயே ஆள் செட் அப் செய்து வைத்து பேசவிடுவதாக சொல்லிருப்பது அரசியல் களத்தை மீண்டும் சூடு பிடிக்கச் செய்திருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola