டேராடூனில் ஆதவ் அர்ஜூனா AIRPORT-ல் மடக்கிய செய்தியாளார் போன் பேசியபடியே ESCAPE | Karur Stampede | TVK | Vijay | PM Modi
சர்ச்சையாக கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜூனா மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் டேராடூனில் முகாமிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பேட்டியளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் இழப்பீடு அறிவித்தார் விஜய்.
இதனைத்தொடர்ந்து தவெக தேர்தல் குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இலங்கை, நேபாளத்தை போல புரட்சி வெடிக்கும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. அப்போது அவரிடம், மீண்டும் தவெக பிரச்சாரத்தை தொடங்குமா? என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் நீதிக்காக பாடுபடுகிறோம். விரைவில் உண்மையும், நீதியும் வெளிவரும் என்று பதிலளித்தார்.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாநகரைச் சேர்ந்த கதிரவன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல் துறை கவனத்துடன் வழக்குப் பதிவு செய்து, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் சம்பவத்தில், நீதிமன்ற விசாரணையில் உண்மை வெளியே வரும்" என தெரிவித்தார்.
சிறந்த வீடியோக்கள்