Special Children Tirupati Visit | சிறப்பு குழந்தைகள்..ரயிலில் திருப்பதி பயணம்!அசத்திய ரோட்டரி சங்கம்
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு குழந்தைகளை திருப்பதி வரை ரயிலில் அழைத்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்து ஆச்சிரிய படுத்தியுள்ளது தமிழ்நாடு ரோட்டரி சங்கம்..
வீட்டில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு சமாளிப்பது என்பதே பெற்றோர்களுக்கு பெரும்பாடாக உள்ள காலத்தில், 1008 சிறப்பு குழந்தைகள் சென்னையிலிருந்து ரயில் மூலியமாக திருப்பதி வரை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானமும், சர்வதேச ரோட்டரி சங்கமும் இணைந்து சென்னையில் உள்ள பல்வேறு காப்பகத்தை சேர்ந்த சிறப்பு குழந்தைகளை, தனியாக ஒரு சார்டர்ட் ரயில் புக் செய்து இங்கிருந்து ரெணிகுண்டா வரை அழைத்து சென்றனர்.
அங்கே திருப்பதி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஆரணி ஸ்ரீனிவாசலு, அவர்களை வரவேற்று கொடி அசைக்க 1008 சிறப்பு குழந்தைகள் பேருந்தில் திருமலைக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கே கடுமையான கூட்டத்திலும் யாருக்கும் எந்த விதமாக பாதிப்பும் ஏற்படாமல், எப்படி இந்த பயணத்தை திட்டமிட்டோம், அது எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது என்று விவரிக்கிறார் சர்வதேச ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் மஹாவீர் போத்ரா..
சிறப்பு குழந்தைகள்..ரயிலில் திருப்பதி பயணம்!அசத்திய ரோட்டரி சங்கம்