Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்
பாதுகாப்பு பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இறந்த சார்பு ஆய்வாளர் உடலுக்கு ADGP நேரில் அஞ்சலி செலுத்திய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடந்தது.இதற்காக பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் பாதுக்காப்பு பணியில் இருந்தார். அப்போது ஆபத்தான முறையில் பிளக்ஸ் பேனர் ஒன்று இருந்துள்ளது. அதனை சரவணன் அகற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக பிளாக்ஸ் பேனர் மின் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்ததில்மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார்
இந்த நிலையில் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான கே.நெடுங்குளம் கிராமத்தில் அவரது உடல் கொண்டு வரப்பட்டது. சரவணனின் உடலுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவஆசிர்வாதம், தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, ராமநாதபுரம் DIG அபினவ்குமார், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எரியூட்டப்பட்டது.
உயிரிழந்த சரவணனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 6 வயதில் மகனும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது
தீபாவளி திருநாளை தமிழகமெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடிய நிலையில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தது நெடுங்குல மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,