Nithiyanantham Speech | என் ரூமுக்கு கதவே இல்லை.. இதுதான் கைலாசா.! நித்தியின் புதிய வீடியோ!

 

இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்ததாக இவர் மீது இன்னும் பல குற்றங்கள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியிருக்கிறார்.

தனி தீவை உருவாக்கியது மட்டுமில்லாமல் தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென அறிவித்து அதிரவைத்தார். இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார். இந்த வீடியோக்களும் ஏதோ காரணத்திற்காக வைரலாகிவிடும்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola