Nithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

Continues below advertisement

பீகார் முதலமைச்சர் மீண்டும் கூட்டணி மாற ரெடியாகிவிட்டதாக பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. ”நாங்க சொல்றத தான் முடிவு” என முக்கிய விவகாரம் ஒன்றில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது ஜனதா தளம்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூட்டணி தாவிக் கொண்டே இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே விமர்சனம் இருந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணிக்கு தாவிய நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியமைப்பதில் கிங் மேக்கராக மாறினார் நிதிஷ் குமார்.

பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போதே அதிகார மோதல் ஆரம்பமாகிவிட்டது. பீகாரில் பாஜக கூட்டணியின் முகம் யார் என்பதில் போட்டா போட்டி நடந்து வருகிறது. தற்போது மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 84 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 48 எம்எல்ஏக்களும் உள்ளனர். அதிக இடங்களை வைத்திருந்தும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்ததால் பாஜகவினர் அதிருப்தியில் இருந்தனர். அதனால் இந்த முறை பாஜகவுக்கு தான் முதலமைச்சர் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். மற்றொரு பக்கம் நிதிஷ் குமார் தலைமையில் தான் ஆட்சியமையும், அதில் எந்த மாற்றமும் இல்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் விடாப்பிடியாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவிலும் கூட்டணிக்கு வந்த போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு, தற்போது நடந்த தேர்தலில் அந்த பதவியை தனது வசமாக்கியது பாஜக. அதே ஃபார்முலாவை பீகாரிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜவினர் முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் கூட்டணி மாறுவதற்கும் நிதிஷ் குமார் தயாராக இருப்பதாக சொல்கின்றனர். அதனால் கூட்டணி கணக்குகளை மனதில் வைத்தும் பாஜக முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. நிதிஷ் குமார் அவ்வப்போது அணி மாறுவதை வழக்கமாக வைத்திருப்பதால் மீண்டும் கூட்டணி மாறி விடுவாரோ என்ற பயம் பாஜகவுக்கு இருக்கிறது.

ஆனாலும் பீகார் பாஜகவினரும் நொந்து போகாத அளவுக்கு முடிவெடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பாய் பிரேந்திரா, நிதிஷ் குமார் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என சொல்லி பாஜகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram