பங்குச்சந்தையில் JIO.. முகேஷ் அம்பானி சர்ப்ரைஸ்! குஷியில் முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச்சந்தைக்குள் ஜியோ நுழைவதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இட்யக்குநருமான முகேஷ் அம்பானி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஜியோ 50 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதாகவும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவு கொடுத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நீண்ட காலமாக முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த முக்கியமான அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். ஜியோ தனது நிறுவன பங்குகளை பங்குச்சந்தையில் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பேசிய அவர், ‘ஜியோ பங்குகள் IPO செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்பதை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். அனைத்து ஒப்புதல்களுக்கும் பிறகு 2026ம் ஆண்டின் முதல் பாதியில் ஜியோவை பங்குச்சந்தைக்கு கொண்டு வர இலக்கு வைத்துள்ளோம். ஜியோ தனது உலகளாவிய போட்டியாளர்களை போலவே நல்ல மதிப்பை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபிக்கும் என உறுதியளிக்கிறேன். அதேபோல் இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola