”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!

மோடி இன்று தமிழகம் வரும் நிலையில் திமுக ஆட்சியை வழி அனுப்ப தமிழ்நாடு முடிவெடுத்துவிட்டது  என ட்வீட் ஒன்றை பகிர்ந்தார்... இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் சீசன் வந்தால் மட்டுமே தமிழ்நாடு வரும் மோடி தொடர் துரோகங்கள் பாஜகவுக்கு தோல்வியே தரும் என முதல்வர் ஸ்டாலின் மோடியை டேக் செய்து சுடச்சுடச் பதிலடி கொடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். இந்தநிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது! மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு  முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்  சாதனையும்  பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ட்விட்டை டேக் செய்து தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? "#MGNREGA (ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி G RAM G கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?

பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டலின் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola