தமிழ்நாடுக்கு அவ்வளவுதானாமத்திய பட்ஜெட் 2026-27 ஸ்டாலின் vs நிர்மலா | MK Stalin Vs EPS
ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டுக்கு, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் குறைந்த அளவிலான திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.
2026-27 நிதிநிலையாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியா வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இதுதான். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறவிருப்பதால், இந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கென்று மிகக் குறைந்த அளவில்தான் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ``சென்னை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் உட்பட 7 அதிவேக ரயில் வழித்தடம். ஆதிச்சநல்லூரில் கலாசார மையம். பொதிகை மலையில் ட்ரெக்கிங் சுற்றுலாவை மேம்படுத்த திட்டம். தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் அரியவகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம். பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள்" ஆகிய திட்டங்கள்தான் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதாவது, தமிழ்நாட்டுக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி, கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, புதிய ரயில் திட்டங்கள், 50 சதவிகித வரிப்பகிர்வு" ஆகியவற்றை ஸ்டாலின் கோரிக்கையாக முன்வைத்தார். ஆனால், இவை எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாத்தாக்கள் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவிலான திட்டங்கள் அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடத்தில் ஏமாற்றத்தை ஏற்பாடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.