MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

Continues below advertisement

திருக்கொள்ளிக்காடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம்,  திருக்கொள்ளிக்காடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தார். 

அப்போது  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம் எல் ஏ பூண்டி கலைவாணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். 

இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பூண்டி கலைவாணன்,

இச்சம்பவம் குறித்து அறிந்த மாண்புமிகு கழகத் தலைவர்
@mkstalin அவர்கள், உடனடியாக என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விபத்து மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளையும் தடையின்றி உடனே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதன்பேரில், விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களுக்குத் தேவையான மேல்சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட மருத்துவர்களிடமும் அறிவுறுத்தினேன். 
 எனக் குறிப்பிட்டுள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola