Police Pocso Arrest | சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் காவலர் கைது அதிரடி காட்டிய SP மீனா

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக  பணியாற்றி வருகிறார்.  இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 மகன்களும்  உள்ளனர். மனைவி குழந்தைகள் சொந்த ஊரில் உள்ள நிலையில் திருநாவுக்கரசுக்கும் போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்னுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. 

இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். போனில் பேசும்போது திருநாவுக்கரசுக்கும், அந்தப் தங்கையான 16 வயது  சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி சிறுமியை காவலர் குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு அவரை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதறிய அந்த சிறுமி, இதுகுறித்து 1098 சைல்டு ஹெல்ப்லைனுக்கு வந்த புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் என்பவர் பெண் உதவியாளருடன்  பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று  நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்சோவில்) வழக்குப்பதிந்து திருநாவுக்கரசை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட எஸ்பி மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola