EB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் குத்தால மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் மது போதையில் படுத்து உறங்கியுள்ளனர். ஆதிரமடைந்த பொதுமக்கள் அந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்திலிருந்து  அங்குள்ள  சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் குத்தாலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராத நிலையில், அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பலமுறை கால் செய்தும் அவர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் குத்தாலம் துணை மின் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது மது அருந்திவிட்டு மின் பாதை ஆய்வாளர் கண்ணன், கங்காதரன் ஆகிய இருவரும் குடிபோதையில் அலுவலகத்தில் உள்ளே படுத்து உறங்கியாதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை தட்டி எழுப்பி மின்நிறுதம் குறித்து தெரிவித்து அதனை சரி செய்ய செல்லி கூறியுள்ளனர்.

இந்த சூழலில் இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கவனமாக கையாளக்கூடிய மின்சாரத்தை குடிபோதையில் ஊழியர்கள் கையாள்வதால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் மின்வாரியத்துறை அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளை சரியான முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram