”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கே

நிர்மலா சீதாராமன் இங்கிலிஷ்லாம் நல்லாதான் பேசுறாங்க, ஆனால் செயல்கள் ஒன்னும் சரியில்லயே என நேருக்கு நேர் சொல்லி அதிர வைத்துள்ளார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

மாநிலங்களவையில் அரசியலமைப்பு பற்றி பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை டார்கெட் செய்து விமர்சனங்களை அடுக்கினார். முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தியின் ஆட்சியில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டி பேசினார். அவர்கள் அரசியலமைப்பில் கொண்டு வந்த திருத்தங்கள் எதுவும் ஜனநாயகத்திற்கு பயன்படவில்லை, மாறாக அதிகாரத்தில் இருந்தவர்களை பாதுகாத்துக் கொள்ள தான் பயன்பட்டது என கூறினார். இன்று இந்தியாவில் பேச்சுரிமை இருப்பதாக சொல்லப்படுகிறது, ஆனால் பேச்சுரிமையை நெரிக்கும் சட்டத்திருத்தம் ஒன்றை அப்போதைய இடைக்கால அரசு கொண்டு வந்தது. அதுவும் அரசியலமைப்பு கொண்டு வந்த ஓராண்டுக்குள் இந்த சம்பவம் நடந்தது” என நிர்மலா சீதாராமன் விமர்சித்தார். கையில் பேப்பரை வைத்துக் கொண்டு நிர்மலா சீதாராமன் வாசித்தார். 

காங்கிரஸின் முக்கிய தலைவர்களை நிர்மலா சீதாராமன் விமர்சித்ததால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுப்படைந்தார். மாநிலங்களவையில் எழுந்து பேசிய அவர், ”எப்படி வாசிக்க வேண்டும் என்று எனக்கும் தெரியும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் முனிசிபாலிட்டி பள்ளியில் படித்தேன். நிர்மலா சீதாராமன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அதனால் அவர் ஆங்கிலம் பேசுவது நன்றாக இருக்கும். அவர் இந்தி பேசுவதும் நன்றாக தான் இருக்கும். ஆனால் அவரது செயல்கள் நன்றாக இல்லை” என அவையிலேயே வைத்து சொன்னார்.

மல்லிகார்ஜூன கார்கே பேச பேச மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola