Vinayagar Chaturthi 2021 : களையிழக்கும் விநாயகர் சதுர்த்தி..தேங்கிய சிலைகள்..தவிக்கும் தொழிலாளர்கள்!

Continues below advertisement

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து மதுரை மாட்டுத்தாவணி அருகே கூடாரம் அமைத்து சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலைகளை பொதுவில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பொதுவழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் 2 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாகவும் வடமாநில தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை பொது இடங்களில் மக்கள் கூடாத வகையில், கொண்டாட்டங்களுக்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி நடைபெறும் என்ற நம்பிக்கையில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஒரு அடி முதல் 15 அடி சிலை வரையிலான ஆயிரக்கணக்கான சிலைகளை கடந்த பாதுகாப்பதற்கு அதிக அளவில் சிரமம் ஏற்பட்டது என்றும், தங்களது சொந்த ஊரில் இருந்த நிலத்தை விற்றும், கடன் வாங்கியும் தொழிலை தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டுது, இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளதால் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியவில்லை என்று ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உரிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram