TTF Vasan : அடுத்த மாவு கட்டு.. TTF வாசன் மீண்டும் கைது! கார் LICENSE கோவிந்தா?
”எப்படி மாப்ள இருக்க” என்று மதுரையில் ஒத்தை கையில் காரை ஒட்டிக்கொண்டே, மற்றோரு கையில் போன் பேசிய டிடிஎப் வாசனை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்துள்ளது காவல்துறை.
பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட TTF வாசன் எல்லை மீறி போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்பட்டதால், 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம தடை விதித்துள்ளது.
ஏனினும் தன்னுடைய யூடியுப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் TTF வாசன் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு அதில் ஊர் ஊராக சுற்றி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த மே 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டியுள்ளார் டிடிஎப் வாசன். அது அனைத்தையுமே தன்னுடைய காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவு செய்து தன்னுடைய Twin Throttlers YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் போன் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக TTF வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரனை நடைப்பெற்று வருவது எங்கே டிடிஎப் வாசனின் கார் ஓட்டும் உரிமமும் ரத்து செய்யபடுமோ என்று கேள்வியை எழுப்பியுள்ளது.