ABP News

Stalin In Arittapatti | ”4 வருஷம் ஆயிடுச்சு முதல்வரே தேர்தல் வாக்குறுதி என்னாச்சு” பாட்டு பாடி ஆசிரியர் கேள்வி

Continues below advertisement

இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் பவித்ரா என்ற பெண் ஒருவர் அரிட்டாப்பட்டியில் We Are all Waiting 12 Year Sir என ஊடகங்கள் வாயிலாக பாடல் பாடி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 12 ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பட்டதாரி பெண் ஆசிரியர் பவித்ரா என்பவர் தனது குழந்தைகளுடன் முதல்வரை சந்திக்க அரிட்டாப்பட்டிக்கு வந்தார். ஆனால் முதல்வரை நேரடியாக சந்தித்து மனு கொடுக்க முடியவில்லை. அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தாவது 25,000 க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு நிறப்பப்படாமல் உள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பட்டதாரி பெண் ஆசிரியர் பவித்ரா தங்களுக்கு கோரிக்கையை சினிமா பாடல் மெட்டில் பாடினார், மேலும் We Are all Waiting 12 Year Sir என தமிழ், ஆங்கிலத்தில் கோரிக்கைகளை பாடியது அங்கிருந்த அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola