Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு

Continues below advertisement

மதுரை திருமங்கலம் அருகே தனியார் பள்ளி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - இந்த பேருந்தில் பயணித்த 25 பள்ளி மாணவ மாணவியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..

மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில்திருமங்கலத்தில் உள்ள பி கே எம் பள்ளியின் ஆரம்பப்பள்ளி பேருந்து 25 பள்ளி மாணவிகளுடன் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தில் உள்ள டீசல் டேங்க் பகுதியில் இருந்து திடீர் புகை ஏற்பட்டு, தீப்பிளம்பு வந்ததாக சொல்லப்படுகிறது . அதனைஅறிந்த பள்ளி பேருந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன், திடீரென வண்டியை நிறுத்தி 25 பள்ளி மாணவ மாணவிகளை உடனடியாக கீழே இறக்கி விட்டு தொலைவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து திடீரென தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கின. இதனால் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன .இதனை தொடர்ந்து திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 15 நிமிடமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 

மதுரையில் பள்ளி பேருந்து நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola