ESCAPE ஆன விழா குழுவினர் பரிசு தராம எப்படி போலாம்? மடக்கிய காளை உரிமையாளர்கள் | Palamedu Jallikattu Issue

Continues below advertisement

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டும் பரிசு பொருள் வழங்காததால் விழா குழுவினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது பரிசு வாகனத்தில் ஏறி பரிசுகளை அள்ளிச் சென்ற காளை உரிமையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு ஆனது நேற்று அதிகாலை முதல் இரவு வரை விறுவிறுப்பாக நடைபெற்றுது. நேற்று போட்டி சற்று கால தாமதமாக ஒன்பது மணிக்கு மேல் தொடங்கப்பட்டது. இதனால் ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் காலதாமதமாக நடைபெற்றதால் 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்படவில்லை. 

இதனால் விழா குழுவினர் அவிழ்க்கப்படாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுவதாக கூறினர். ஆனால் விழா குழுவினர் பரிசுகளை வழங்காமல் வாகனத்தில் பரிசு பொருட்களை ஏற்றி சென்றதால் அத்திரம் அடைந்த 100 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் பரிசு பொருள் வாகனங்கத்தில் ஏறி தங்களுக்கு தேவையான பரிசு பொருட்களை அள்ளி சென்றனர்.

மற்றொரு புரம் அதிகாலை முதல் இரவு வரை காத்திருந்து ஜல்லிக்கட்டு களம் கண்டு வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் பரிசுகள் வாங்குவதற்காக மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு வந்து பரிசுகளை கேட்டனர். ஆனால் விழா குழுவினர் பரிசுகள் தர மறுத்ததால் விழா குழுவினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் காலையிலிருந்து இரவு வரை ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அவிழ்த்து வெற்றி பெற்ற காலை உரிமையாளர்களும் பரிசு பொருள் கிடைக்காமல்  ஏமாற்றத்துடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola