TTF Vasan | ’’நீ என் உசுரு அண்ணே’’குட்டி FANS பாசமழை! வெளியே வந்த TTF
காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த டிடிஎஃப் வாசனை அண்ணே அண்ணே என கூச்சலிட்டு போட்டோ எடுத்துக்கொள்ள குட்டி ரசிகர்கள் படையெடுத்து வந்துள்ளனர், அதில் ஒருவர் அண்ணே நீ என் உசுருண்ணே என்ன வேணா பன்னுவேன் உனக்காக என கூறு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது
பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட TTF வாசன் எல்லை மீறி போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்பட்டதால், 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம தடை விதித்துள்ளது.
ஏனினும் தன்னுடைய யூடியுப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் TTF வாசன் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு அதில் ஊர் ஊராக சுற்றி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு மே 15 ஆம் தேதி TTF வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார், அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார், இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் TTF வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர், இவ்வழக்கில் TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட 6 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது, அதன்படி முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த TTF வாசன் கையெழுத்திட்டார், அப்போது வழக்கு விசாரணைக்காக TTF வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் நேரில் நோட்டீஸ் வழங்கினார்கள், அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த TTF வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு TTF வாசனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கெஞ்சினார்கள், நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டாம் என TTF வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தல் செய்தனர்