Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்கு குல்லா கொள்ளையர்களின் நடுங்கவைக்கும் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் காலி வீட்டுமனை நிலங்கம் மற்றும் கட்டுமானம் நடக்கும் கட்டடங்கள் அதிகளவில் உள்ளன.
இந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட ராம்கோ நகரில் நேற்றீ நள்ளிரவு அடுத்தடுத்து நான்கு வீடுகளில் முகமூடி  கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமூடி, கையில் கூர்மையான ஆயுதங்கள், குண்டாஸ் போன்ற தோற்றம் என பார்க்கவே பயங்கரமாய் காட்சி அளிக்கின்றனர் இந்த கொள்ளையர்கள்.அப்போது, ஒரு வீட்டின் கதவை முகமூடி கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்த போது  சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ரவி  கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்ததும் பகக்த்துவீட்டார்கள் கதவை திறந்து வரும் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் குரங்கு குல்லா கொள்ளையர்கள் பூட்டி இருக்கும் வீட்டின் கதவை உடைக்கும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் மற்றும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள்  அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு அதிக அளவில் காவல் அதிகாரிகளை நியமித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் அல்லது ஒரு புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola