Madurai death : பொங்கல் தராத மனைவி..விபரீத முடிவெடுத்த கணவர்! மதுரையில் சோகம்

Continues below advertisement

பொங்கல் தானே கேட்டேன் எதுக்கு இட்லி வாங்கிட்டு வந்த என்று மனைவியிடம் கோபப்பட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

மதுரை மாநகர் தத்தனேரி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் -பாண்டிசெல்வி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள், பிள்ளைகள் மூவருக்கும் திருமணமாகி விட்டதால் இருவரும் தனியாக வசித்துவந்துள்ளனர்.  பாண்டிசெல்வி பூ வியாபாரம் செய்து வந்துள்ளார், சண்முக சுந்தரம் கடை ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

 

இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சண்முக சுந்தரத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிலயே இருந்து ஓய்வு எடுத்துவந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தினசரி மாத்திரை எடுத்துவந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பூ வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மூதாட்டி பாண்டிசெல்வியிடம் வீட்டில் ஓய்வில் இருந்த சண்முக சுந்தரத்திடம் தான் வாங்கிவந்த இட்லியை கொடுத்து சாப்பிட கூறியிருக்கிறார். 

 

அப்போது நான் பொங்கல் தானே கேட்டேன் ஏன் இட்லி வாங்கிவந்தாய் என தனது மனைவியிடம் சத்தமிட்டு பேசியுள்ளார். 

 

இதனையடுத்து நாளைக்கு பொங்கல் வாங்கி வருவதாக பாண்டிசெல்வி  கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முக சுந்தரம் நான் சொல்வதை கேட்கமாட்டியா ? என்று  கோபத்தில் தினமும் சாப்பிடும் மாத்திரையை மொத்தமாக சாப்பிட்டுவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். 

 

இதனையடுத்து சண்முக சுந்தரத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் குலவழக்கப்படி சண்முகசுந்தரத்தின் உடலுக்கு இறுதிசடங்கு நடைபெற்றது.

 

தான் கேட்ட உணவு கிடைக்கவில்லை என்று சண்முக சுந்தரம்  தற்கொலை செய்து கொண்ட அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram