Madurai govt bus driver : திமிராக பேசிய ட்ரைவர்! ரவுண்டுகட்டிய பெண்கள்! அரசுப் பேருந்தில் பரபரப்பு

Continues below advertisement

மதுரையில் மகளிர் இலவச பேருந்தில் வரும் பெண்கள் மற்றும் மாணவர்களை ஓட்டுனர்  தரக்குறைவாக பேசியதால் இரண்டு அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் கிராமத்திற்கு திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினந்தோறும்  பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ராயபாளையத்திற்கு நான்கு முறை அரசு பேருந்து வந்து செல்கின்றது.

தினமும்   மாலை நேரங்களில் திருமங்கலம் நிலையத்தில்  ஏறும்  பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களை ஓட்டுநர் தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம் போல திருமங்கலம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மற்றும் பெண்கள் பேருந்தில் ஏறியுள்ளனர், அப்போது பேருந்து ஓட்டுனர் பேருந்தில் பயணித்த மாணவர்களை தரக்குறைவாக பேசி உள்ளார் அதனை எதிர்த்து கேட்ட பெண்களையும் ஓட்டுனர் தரக்குறைவாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்களுக்கு இலவச பேருந்து பயணம்  என்பதால் நான் விரும்பும் இடத்தில் தான்  பேருந்தை நிறுத்துவேன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேருந்து நிறுத்த மாட்டேன் என்று ஓட்டுநர் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த கிராம மக்கள் ராயபாளையம் கிராமத்திற்கு வந்த இரண்டு அரசு பேருந்து சிறை பிடித்தனர் போராட்டம் நடத்தினர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம்  கோட்ட மேலாளர் , திருமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை  உட்பட அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

 அரசுப் பேருந்து ஓட்டுநர் பெண்களையும் மாணவர்களையும் தரக்குறைவாக பேசியதை கண்டித்து இரண்டு அரசு பேருந்துகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram