Madurai DMK Councilor : சுக்குநூறான பலகார கடைசூறையாடிய திமுக கவுன்சிலர்!பரபரப்பு சண்டை காட்சி!

Continues below advertisement

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் கடை வைத்திருக்கும் லோகேஸ்வரி என்பவர் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது பெயரில் இருந்த கடையை ஆறுமுகம் என்பவருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடைக்கான வாடகை தொகையை கடன் வாங்கிய பாண்டியிடம் நேரடியாக செலுத்துமாறு கூறியுள்ளார். 

அதன்படி அந்த இடத்தில் பலகார கடை நடத்தி வந்த ஆறுமுகமும்,  மாதம் வாடகையை பாண்டியிடம் கரெக்டாக கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. திடீரென அசல் தொகை முழுவதையும் செலுத்துமாறு பாண்டி கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஆறுமுகம், பணம் நான் வாங்கவில்லை லோகேஸ்வரியிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் மாத மாதம் பணம் கட்டுவது நீ தானே, உன்னிடம் தான் கேட்பேன் என வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர் கடன் கொடுத்த பாண்டி இந்த விவகாரம் பற்றி தனது உறவினரான திருமங்கலம் 1வது வார்டு கவுன்சிலர் காசி பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலகார கடைக்கு வந்த திமுக கவுன்சிலர் நீ எதற்கு நகராட்சி கட்டிடத்தில் கடை வைத்து நடத்துகிறாய் உடனே கடையை காலி செய் என சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பலகார தட்டுகளை வீசி எறிந்துள்ளார். 

உடனே அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து திமுக கவுன்சிலர் பாண்டியை அனுப்பி வைத்தனர். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் திமுக கவுன்சிலர் பலகார கடையை சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram