மேலும் அறிய

Madurai Dalit Death | மீண்டும் ஒரு LOCKUP DEATH? பட்டியலின இளைஞர் மர்ம மரணம்! கதறி அழும் பெற்றோர்

மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற பட்டியலின இளைஞர்  கால்வாயில் இருந்து சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் - முத்துலெட்சுமி தம்பதியரின் ஒரே மகன்  மூன் தினேஷ்குமார் (30 ). இவர் ஐடிஐ முடித்துவிட்டு வெள்ளரிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். தினேஷ்குமார் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 
இதன் காரணமாக இன்று அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையில் தனிப்படை காவலர்களான காமு, நாகராஜ் ஆகியோர் தினேஷ்குமாரை கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணை என கூறி அழைத்துசென்றுள்ளனர்.

அப்போது தினேஷ்குமார் தண்ணீர் கேட்டபோதும் தரமறுத்து காவல்துறையினர் அழைத்துசென்றதாகவும், 9 மணிக்கு அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு வந்து தினேஷ்குமாரை வீட்டிற்கு அழைத்துசெல்லுமாறு கூறியுள்ளனர்.
பின்னர் தினேஷ்குமாருடன்  அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் விசாரணைக்காக அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் கூறியபடி 9 மணிக்கு தினேஷ் குமாரின் தந்தை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது காவல் நிலையத்தில் தினேஷ்குமார் இல்லாத நிலையில் தனது வழக்கறிஞருடன் தினேஷ்குமாரை காவல்துறையினர்கள் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளனர்.

பின்னர் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள கால்வாயில் மூழ்கி சடலம் கிடப்பதாக கூறிய நிலையில் தினேஷ் குமாரின் உடல் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மதியம் 1 மணியளவில் அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் தந்தையை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.் அப்போது தனது மகன் தினேஷ்குமார் குறித்து காவல்துறையினரிடம் அவரது தந்தை கேட்டுள்ளார்.அப்போது தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள புற காவல் நிலையத்தில் வைத்து அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அப்போது விசாரணை முடித்துவிட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போது தினேஷ்குமார் காவல் துறையினரிடம் இருந்து தப்பியோட முயன்று வைகையாற்றிற்கு தண்ணீர் செல்லும் வண்டியூர்  வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர், பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் காவல்துறையினர் தனது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்துகொன்றுவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மேலும் 1 மணிக்கு மீட்கப்பட்டதாக சொல்லப்பட்ட சடலமானது மாலை 5 மணி வரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிணவறைக்கு கொண்டு செல்லப்படவில்லை என தினேஷ் குமாரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்

மதுரை வீடியோக்கள்

Madurai Dalit Death | மீண்டும் ஒரு LOCKUP DEATH? பட்டியலின இளைஞர் மர்ம மரணம்! கதறி அழும் பெற்றோர்
Madurai Dalit Death | மீண்டும் ஒரு LOCKUP DEATH? பட்டியலின இளைஞர் மர்ம மரணம்! கதறி அழும் பெற்றோர்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Nobel Prize: டிரம்ப்புக்கு பெப்பே.. அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் வெனிசுலா பெண் - யார் இந்த மரியா?
Nobel Peace Prize 2025: டிரம்ப்புக்கு பெப்பே.. அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் வெனிசுலா பெண் - யார் இந்த மரியா?
Bihar Election 2025: திருநங்கை-க்கு சீட்! நிதிஷ்-க்கு பிரசாந்த் கிஷோர் செக்.. யார் இந்த ப்ரீத்த?
Bihar Election 2025: திருநங்கை-க்கு சீட்! நிதிஷ்-க்கு பிரசாந்த் கிஷோர் செக்.. யார் இந்த ப்ரீத்த?
Karur Tragedy: கரூர் துயரம்; சென்னை நீதிமன்றம் விசாரித்தது ஏன்? SIT விசாரணை, கிரிமினல் வழக்கானது எப்படி? கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!
Karur Tragedy: கரூர் துயரம்; சென்னை நீதிமன்றம் விசாரித்தது ஏன்? SIT விசாரணை, கிரிமினல் வழக்கானது எப்படி? கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!
H-1B Visa Restrictions: ட்ரம்ப் சார்.. ஏற்கனவே Fees ஏத்துனது போதாதா.?; H-1B விசா-மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
ட்ரம்ப் சார்.. ஏற்கனவே Fees ஏத்துனது போதாதா.?; H-1B விசா-மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Death | மீண்டும் ஒரு LOCKUP DEATH? பட்டியலின இளைஞர் மர்ம மரணம்! கதறி அழும் பெற்றோர்
CM வேட்பாளர் தேஜஸ்வி! DEPUTY CM-ல் வைத்த ட்விஸ்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. அசர வைத்த தைவான் தம்பதி! தமிழர் முறைப்படி திருமணம்
ஸ்டாலின் - அண்ணாமலை சந்திப்பு! ஒரே விமானத்தில் பயணம்! பேசியது என்ன?
Priyanka Gandhi :'’SORRY ஆலியா பட்!பசுவுக்கு உங்க பெயர் தான்’’பிரியங்கா காந்தி கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nobel Prize: டிரம்ப்புக்கு பெப்பே.. அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் வெனிசுலா பெண் - யார் இந்த மரியா?
Nobel Peace Prize 2025: டிரம்ப்புக்கு பெப்பே.. அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் வெனிசுலா பெண் - யார் இந்த மரியா?
Bihar Election 2025: திருநங்கை-க்கு சீட்! நிதிஷ்-க்கு பிரசாந்த் கிஷோர் செக்.. யார் இந்த ப்ரீத்த?
Bihar Election 2025: திருநங்கை-க்கு சீட்! நிதிஷ்-க்கு பிரசாந்த் கிஷோர் செக்.. யார் இந்த ப்ரீத்த?
Karur Tragedy: கரூர் துயரம்; சென்னை நீதிமன்றம் விசாரித்தது ஏன்? SIT விசாரணை, கிரிமினல் வழக்கானது எப்படி? கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!
Karur Tragedy: கரூர் துயரம்; சென்னை நீதிமன்றம் விசாரித்தது ஏன்? SIT விசாரணை, கிரிமினல் வழக்கானது எப்படி? கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!
H-1B Visa Restrictions: ட்ரம்ப் சார்.. ஏற்கனவே Fees ஏத்துனது போதாதா.?; H-1B விசா-மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
ட்ரம்ப் சார்.. ஏற்கனவே Fees ஏத்துனது போதாதா.?; H-1B விசா-மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
Rishi Sunak: MP-யாக இருந்துகொண்டே இரு நிறுவனங்களில் வேலை; அசத்தும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
MP-யாக இருந்துகொண்டே இரு நிறுவனங்களில் வேலை; அசத்தும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
Job in Village Panchayat: மக்களே முந்துங்க.! தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்; இன்றிலிருந்து விண்ணப்பம்
மக்களே முந்துங்க.! தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்; இன்றிலிருந்து விண்ணப்பம்
Mental Health: மெண்டல் ஹெல்த்.. நல்லா சாப்பிட்றது இவ்ளோ முக்கியமா? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணலாமே..!
Mental Health: மெண்டல் ஹெல்த்.. நல்லா சாப்பிட்றது இவ்ளோ முக்கியமா? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணலாமே..!
Nobel Prize Trump: அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு; ட்ரம்ப்புக்கு கிடைக்குமா.?; இதுவரை வென்ற அதிபர்கள் யார்.?
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு; ட்ரம்ப்புக்கு கிடைக்குமா.?; இதுவரை வென்ற அதிபர்கள் யார்.?
Embed widget