Madurai Bus Driver : ’’ஒழுங்கா ஒத்துக்கோ’’ கட்டிப்போட்ட உரிமையாளர்..கதறும் ஓட்டுநர்
மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை பேருந்து உரிமையாளர் ஜன்னலில் கட்டி வைத்து தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
திருப்பதியிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிய ஓட்டுனர் அவர்களிடம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு அதை உரிமையாளரிடம் கொடுக்காமல் பேருந்து ஓட்டுநரே வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அந்த பேருந்தின் உரிமையாளர் ஓட்டுநரை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கையை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அப்போது உண்மையை சொல்லு.. இனி உன்னை மதுரைக்குள்ளேயே பார்க்கக்கூடாது என ஓட்டுநரை மிரட்டுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி தனியார் பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.