உறை கிணறுகள்..பானைகள்..வியக்கவைக்கும் கீழடி! | keeladi | keeladi Research | TamilNadu | sivagangai |

Continues below advertisement

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி 13ம் தேதி தொடங்கப்பட்டது.கொரோனா காரணமாக தொய்வு ஏற்பட்டு மீண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 7-ம் கட்ட அகழாய்வில் பகடைக்காய், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள் நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, சுடுமண் மணிகள், காதணி, கண்ணாடி மற்றும் சங்குகளினால் செய்யப்பட்ட வளையல்கள், கண்ணாடிகளால் செய்யப்பட்ட குறு மணிகள் போன்ற அணிகலன்கள், சூதுபவளம் படிகம் போன்ற கற்களால் செய்யப்பட்ட மணிகளும் சிறிய அளவிலான தங்க கம்பியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

மிகச் சிறிய அளவுள்ள பொருட்களை நிறுத்தும் ஒரு கிராமிற்கும் கீழ் எடையுள்ள எடைக்கல்லும் கிடைத்துள்ளது. சுடுமண் முத்திரை, அரிவாள், ஆணி, சிறிய செப்பு மோதிரம் மற்றும் கற்கோடரி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. இவற்றுடன் முழுமையான பானை, கிண்ணங்கள், மெருகேற்றப்பட்ட சிவப்பு வண்ணப் பானைகள், உடைந்த செங்கற்கள், கூரைஓடுகள் ஆகியவையும் வெளி கொணரப்பட்டுள்ளது. ரசனை மிக்க அழகிய வேலைப்பாடுகளுடன் இருவரி கயிறு வடிவமைப்பு கொண்ட இரட்டை வடத்துடன் அலங்கரிக்கப்பட்ட உறைக்கிணறும் கண்டறியப்பட்டுள்ளன.

 

சுடுமண் உறையில் வெளிப்புறத்தில் கயிறு போன்ற அலங்கார வடிவமைப்பு இருப்பதால் சுடுமண் உறைக்கிணறாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு மேற்கொண்ட பொழுது மேலும் இரண்டு உறைகள் வெளிப்பட்டுத்தப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து ஆச்சரியம் அளிக்கும் வகையில் உறை கிணறுகள் கிடைத்து வருகின்றன. சில உறைகள் ஒன்றோடு ஒன்று இணைத்த நிலையில் உள்ளன. அதே போல் கொந்தகையில் நடைபெறும் பழமையான ஈமக்காட்டில் முதுமக்கள் தாழிகளுக்கு அருகருகே பானைகள் கிடைத்துள்ளன. இவை இறந்த நபர்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram