EB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

மதுரையில் குடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சார வாரிய துறை ஊழியர்கள் இருவர் மது அருந்திக்கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தானையில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான  குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி மின்சார வாரிய ஊழியர்கள் மது அருந்துவது தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது. 

மதுரை மாநகராட்சி சோழவந்தான் பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல் வாரிய  அலுவலகத்தில் சமயநல்லூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் மற்றும் மின்சார வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் ஆகியோர் இருவரும் மது அருந்துக் கொண்டிருந்தனர்.

 

இதைத்தொடர்ந்து இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மின்சார வாரியத்தின் உயர் பொறுப்பில் உள்ள செயற்பொறியாளரே மிகவும் அலட்சியமாக அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் மது அருந்தி கொண்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

 

அரசு அலுவலகத்தை மதுகூடமாக பயன்படுத்தி வருவதை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

 

அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola