Madurai Hospital Murder | மருத்துவமனையில் கொலை..மதுரையில் பரபரப்பு..நடந்தது என்ன?
மருத்துவமனையில் கொலை..மதுரையில் பரபரப்பு..நடந்தது என்ன?
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே வைத்து மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள 6 தளங்களை கொண்ட பிரபல தனியார் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சைபெற்றுவருகின்றனர். இங்கு உள்ள உணவகங்களிலும் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் 6ஆவது தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் உடலைமீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போன நிலையில் நகையை திருடுவதற்காக மூதாட்டியை கொலை செய்தனரா? அல்லது வேறு எதும் காரணமா? என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மதுரையில் பிரதான பகுதியில் உள்ள தனியார்மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.