மீன்பிடி திருவிழாவால் குதூகலம் - காற்றில் பறந்த சமூக இடைவெளி | fish festival | Dindigul |
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடியனூத்து ஊராட்சி. இப்பகுதியில் நல்லாம்பட்டி முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்தப்பகுதியில் உள்ள ராஜா குளத்தில் மீன்களை பிடித்து மக்கள் திருவிழாவை கொண்டாடினர்.
நல்லாம்பட்டி உட்பட 18 கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆண்கள் ,பெண்கள், இளைஞர்கள்,முதியவர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தார்கள்.
இதில் கட்லா, ஜிலேபி , ரோகு உட்பட பல்வேறு வகையான மீன்களை கிடைத்தன. பிடித்து சென்ற மீன்களை வீட்டில் சமைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சொந்தங்களை அழைத்து உணவு பரிமாறி ஒற்றுமையை ஏற்ப்படுத்துவது இந்த திருவிழாவின் நோக்கம் .