OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு

Continues below advertisement

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் முந்தி செல்ல முயற்சி செய்தபோது இரு வாகனங்களும் மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே  மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோயமுத்தூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
 இந்த நிலையில் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து ஓட்டுநர் முன்னாள் சென்ற காரை  முந்தி செல்ல முயன்றதால் அரசு பேருந்தும் காரும் மோதியது

இதனால் சாலையின் நடுவே சென்று நிலை தடுமாறி சாலையின் பக்கவாட்டு சரிவில் மோதியதில் காரும்  அரசு பேருந்தும் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது 

இந்த விபத்தில்  15க்கும் மேற்பட்ட பயணிகள் தலை கை, கால்கள் என பலத்த காயமடைந்தனர். கார் ஓட்டுநரும் காயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் 

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்இந்த நிலையில் விபத்தை குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் காவல்துறையின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தை குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

 நேற்று டயர் வெடித்து அரசு பேருந்து ஒன்று இதே பகுதியில் தலைகீழாக கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola