Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

Continues below advertisement

அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஆதரித்தும், தேர்தல் பத்திர முறை தவறானது என்று அதை தடை செய்தும் அதிரடிகளை காட்டிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான டி.வை சந்திர சூட்டின் பதவி காலம் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற ரேஸ் உச்சம் பெற்றுள்ளது..

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு அடுத்தபடியாக சீனியர் மோஸ்ட் நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார் டிவை சந்திர சூட்.

இந்நிலையில் யார் இந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா என்று விரிவாக பார்க்கலாம். கடந்த 1960ல் டெல்லியில் பிறந்தவர் சஞ்சீவ் கண்ணா. தந்தையோ டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, தாயோ டெல்லி ஸ்ரீராம் கல்லூரியின் பேராசிரியை. டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற சஞ்சீவ் கண்ணா 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார், பின்னர் டெல்லி நீதிமன்றத்திற்கும் தீர்ப்பாயங்களுக்கும் வழக்கறிஞர் ஆனார். 

வருமான வரித்துறையின் நீண்ட கால வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கூடுதல் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய சஞ்சீவ் கண்ணா, 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டு, பின்னர் அடுத்த ஆண்டே நீதிபதியானார். 

பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லி நீதித்துறை அகாடமி ஆகியவற்றல் பல்வேறு பொறுப்புகளை வகித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2019 ஜனவரி 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற வெகு சிலரில் சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர். 


உச்சநீதிமன்ற சட்ட பணிக்குழுவின் தலைவராக பதவி வகித்து, தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆலோசகராகவும் பல்வேறு பொறுப்புகளை வகுத்து வருகிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் தெரிவித்த கருத்துக்கு எதிரான வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் விசாரணைக்காக வந்தபோது, இந்த நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமையும் கருத்து சுதந்திரம் இருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது, ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, கருத்து சுதந்திரம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை நசுக்க பார்ப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்து, செய்தியாளருக்கு எதிரான FIR- ஐ ரத்து செய்ய மறுத்துவிட்டார். 

மேலும் டெல்லியின் கனவு திட்டமான சென்ட்ரல் விஸ்டா மறு வடிவமைப்பு திட்டத்திலும் இரண்டு நீதிபதிகள் ஒரு கருத்தை தெரிவித்தபோது, அதிலிருந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்தார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. 

அதேபோன்று சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு அண்ட் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் அதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தேர்தல் பத்திர முறைக்கு எதிரான வழக்கில், பாஜக அதனை தொடர வேண்டும் என்று வாதிட்ட போது, தேர்தல் பத்திர முறை தவறானது என்று தெரிவித்து தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் மத்திய நீதித்துறை அமைச்சகத்திற்கு, தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் அனுப்பி உள்ள பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா தேர்ந்தெடுக்க ப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram