Sellur Raju : நல்ல வேளை “அணில் மாட்டிகிச்சு, நான் பிழைச்சுகிட்டேன்” செல்லூர் ராஜூ மொமெண்ட்..

மதுரை அ.தி.மு.க  மாணவரணி  கூட்டம்  இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில்  நடைபெற்றது. இதில் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம்.....," தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட 7.5% இடஒதுக்கீடு திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளித்தது. இது ஏழை, எளிய மக்களுக்கு முத்தாய்ப்பான திட்டம். அந்த திட்டம் தொடர்பாக தற்போதைய  அரசு எதுவும் சொல்லாமல் உள்ளது. அதே போல அ.தி.மு.க அரசு கொண்டு வந்த விலையில்லா லேப்டாப், சத்தான உணவு, 16 வகையான பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என சொன்னார்கள். ஆனால் நிதியமைச்சரோ  புது புது கண்டுபிடிப்பாக சொல்கிறார்.  தி.மு.கவை உண்மையான மான் என நினைத்து மக்கள் பொய்யான மானை தேர்ந் தெடுத்துவிட்டனர் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்களா என தெரியவில்லை. கொரானாவை ஒழித்தோம் என அவர்களை, அவர்களே பாராட்டி கொள்கின்றனர். தோழமை கட்சிகளும் பாராட்டுகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola