Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
தமிழனை அடிமை நு சொல்லுவியா என தனது லண்டன் முதலாளிக்கு எதிராக கேஸ் போட்டு வென்று மாஸ் காட்டிய்ள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாதேஷ்..
லண்டன் தென்கிழக்கு பகுதியில் KFC நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றியவர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த மாதேஷ் ரவிசந்திரன். மாதேஷிடம் அந்த கிளையின் தலைவராக பணியாற்றும் இலங்கையை சேர்ந்தவர், விடுமுறை அளிக்காமல், மாதேஷிடம் கூடுதல் நேரம் வேலைவாங்கியும் உள்ளார்.
இதனை பொறுத்துக்கொள்ளாத தமிழரான மாதேஷ், தன்னுடைய பாஸ்சிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் விடுமுறை அளிக்கமாட்டேன் என்கிறீர்கள் ? என்னை கூடுதல் நேரம் பணிச் செய்ய சொல்வது ஏன்? என்று முறையிட்டிருக்கிறார். ஆனால், மாதேஸ் தன்னிடம் இது பற்றி கேட்டதை பொறுத்துக்கொள்ளாத அந்த இலங்கையை சேர்ந்தவர். மாதேஷை நோக்கி ‘நீ அடிமை’ அப்படிதான் வேலை பார்க்க வேண்டும். தமிழர்கள் என்றாலே எங்களுக்கு அடிமைகள்தான், தமிழர்கள் என்றால் மோசடி நபர்கள் என்று தன்னுடைய வாய்க்கு வந்ததையெல்லாம் அந்த இலங்கை தமிழரான KFCயின் பாஸ் பேசியிருக்கிறார்.
உடனடியாக அவர் பேசியதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த மாதேஷ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். முதலாளி என்பதற்காகவே இப்படி பேசுவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று அவரும் கடுமையான எதிர்வினையாற்றிவிட்டு, வேலையை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.
ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் தன்னுடைய மனதை காயப்படுத்திருந்ததால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் மாதேஷ். நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரித்திருக்கிறது. மாதேஷ் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று கருதிய நீதிமன்றம். இந்த காலத்திலும் இன வேற்றுமை பார்ப்பது என்பது முட்டாள்தனமானதோடு அது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள நீதிமன்றம். நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் மன ரீதியான கவுன்சிலிங் கொடுப்பதற்கு அறிவுறுத்தியிருக்கிறது.
அதோடு, பாதிக்கப்பட்ட தமிழரான மாதேஷ் ரவிசந்திரனுக்கு இழப்பீடாக 67 ஆயிரம் பவுண்ட்ஸ் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் தமிழர் இனத்தை இழிவுப்படுத்த முயன்றவருக்கு கண்டிப்பையும் அபராதத்தையும் பெற்றுக்கொடுத்ததுடன் இனி இதுபோன்று நடக்காமல் இருக்கவும் நீதிமன்றம் மூலம் உத்தரவை பெற்றிருக்கிறார் தமிழரான மாதேஷ் ரவிசந்திரன்.