DMK PMK Clash | என் இடத்துல கட்சிக் கொடியா?” திமுக- பாமகவினர் மோதல்! களத்தில் இறங்கிய POLICE

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திமுக கொடிக்கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் திமுக- பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் கடை நடத்தி வருபவர் ஜவகர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் , நகர அமைப்புச்செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் செவிலிமேடு பகுதியில் உள்ள திமுகவினர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஜவகர் கடை அருகே  திமுக கொடி கம்பத்தை வைத்துள்ளனர். அதைப் பார்த்த ஜவகர் என் இடத்தில் கொடி வைக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஜவகர் பாமக ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொடி கம்பத்தை அகற்ற முயற்சி செய்தார். அதேபோன்று கொடிக்கம்பம் இங்கிருந்தால் தான்  பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என ஜவகர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், ஜவகர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது எதிர் தரப்பினர் மேல் பெட்ரோல் பட்டதாகவும், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி திமுகவினர் போலிசில் புகார் அளித்தனர். மற்றொரு பக்கம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாமக பிரமுகர் ஜவகர் போலிசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இத்தகவலை அறிந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் துரிதுமாக செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கொடிக்கம்பம் விவகாரத்தில் திமுகவினரும், பாமகவினரும் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram