Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
கச்சபேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை அடுத்து விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கோவில் நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவன் கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோவில்களில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. விஷ்ணு பகவான் ஆமை வடிவத்தில் சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜப் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் 32 வகையான சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தீபாராதனைகள் நடைபெற்றன. நடராஜரும், சிவகாமியும் பட்டு மலர் மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்,
விடிய விடிய நடைபெற்ற ஆருத்ரா பல்வேறு வகையான அபிஷேகங்களை பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..கச்சபேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை அடுத்து விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்