Accident CCTV | அதிவேகத்தில் வந்த பைக்கட்டுப்பாட்டை இழந்த கார்நேருக்கு நேர் மோதி விபத்து

Continues below advertisement

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான நிலையில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவரது வயது (60) இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிவேகமாக கடக்க முயன்றதால் சேலத்திலிருந்து சென்னை நோக்கி டாடா காரில் வந்த நவீன்குமார் என்பவர் முதியவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.

இதனையடுத்து முதியவர் சாலையில் விழுந்து உருண்டு ஓடினார்.கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த வீட்டின் கேட்டின் மீது மோதியது. அப்போது காரில் இருந்த ஏர் பேக் ஓபன் ஆகி சென்னையை சேர்ந்த நவீன் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

மேலும் சாலையில் உருண்டு காயமடைந்த ரமேஷ் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola