Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

Continues below advertisement

9 வயது மாணவி பள்ளியிலேயே வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மாணவி தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நடந்தது என்ன என்பது குறித்த சிசிடிவி ஆதாரம் வெளியாகி அதிரவைத்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த 9 வயது மாணவியான அமைரா ஜெய்பூரில் இருந்த நீந்ஜா மோடி பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சக மாணவர்கள் அமைராவை 18 மாதங்களாக சீண்டிக் கொண்டே இருந்ததாகவும் இதனால் அமைரா கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்கின்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி பள்ளியில் 4வது தளத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளி வகுப்பில் இருந்த மாணவர்கள் சிலர் மீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சிலேடில் ஏதோ எழுதியதாக அப்போது ஏற்பட்ட தகராறே தற்கொலையில் முடிந்ததாகவும் அப்போது தகவல் வெளியானது. இந்த வழக்கில் ஜூலை 1ம் தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அமைராவின் குடும்பத்தினர் வகுப்பறையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அமைரா வகுப்பில் இருக்கும் போது சக மாணவர்கள் டிஜிட்டல் சிலேட்டில் எழுதி காண்பிக்கிறார்கள். இதனால் முகம் மாறிய அமைரா அதனை அழிக்கும்படி அவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதனையே செய்து மாணவியை சீண்டியுள்ளனர். அப்போது வகுப்பில் இருந்த ஆசிரியரிடம் அமைரா மாணவர்கள் இப்படி செய்வதாக எத்தனையோ தடவை சொல்லியும் ஆசிரியர் காதில் வாங்காமல் வேலை செய்து கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. ஆசிரியரும் இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் பேசிய நிலையில், எந்த உதவியும் கிடைக்காததால் வகுப்பறையை விட்டு ஓடிய அமைரா, 4வது தளத்திற்கு சென்று தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி பேசிய அமைராவின் தாய், என்னுடைய மகள் தரைத்தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு ஓடியுள்ளார். ஒருவராவது அவர் எங்கே செல்கிறார் என கேட்டிருந்தால் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார்” என கண்ணீர்மல்க வேதனை தெரிவித்துள்ளார். ஆசிரியர் என்ன நடக்கிறது என்பதை கவனித்து மாணவிக்கு தேவையான ஆலோசனை வழங்கியிருந்தாலே இந்த துயர சம்பவம் நடந்திருக்காது என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola