Isha Yoga Issue : ”மர்ம மரணம்.. தகன மேடை..காணாமல் போன பக்தர்கள்!” ஈஷா மீது போலீஸ் பகீர்!

ஈஷா யோகா மையத்திருக்கு சென்ற பலர் காணாமல் போய் இருக்கிறார்கள், ஈஷா யோகா மையத்துக்குள்ளேயே தனியாக தகனமேடையும் அமைக்கப்பட்டுள்ளது, ஈஷா யோகா மையத்தில் காலாவதியான மருத்துவ உபகரணங்கள் பயண்பாட்டில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து இருக்கும் அடுக்கடுக்கான தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது...

அண்மையில் கோவையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஈஷா யோகா மையத்தில் தன்னுடைய இரண்டு மகள்களும் மூளை சலவை செய்யப்பட்டு, அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருப்பதாக பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்த நீதிமன்றம் அளித்த அனுமதியும் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினரும் சமூக நலத்துறை அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 1 2 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். 

நாடு முழுவதும் அறியப்படும் ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திற்கு வராத பிரபலங்கலே இல்லை. குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு வரை, ஈஷா யோகா மையத்திற்கு வந்து சென்ற நிலையில், அங்கே காவல்துறையினர் உள்ளே புகுந்து அதிரடியாக சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

ஆனால் உடனடியாக ஈஷா மையம் உச்சநீதிமன்றத்தை நாடி காவல்துறையினர் விசாரணை நடத்த தடை வாங்கியது. 

இந்நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், 23 பக்கம் கொண்ட விரிவான அறிக்கை ஒன்றை தமிழக காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா மையம் மீது குவிந்த புகார்கள் வழக்குகள் குறித்த இடம்பெற்றுள்ள விவரங்கள் பகிரை கிளப்பியுள்ளது..

தமிழக காவல்துறையின் அறிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பலரும் காணாமல் போய்விட்டனர். இதுவரை ஆலந்துரை காவல்நிலையத்தில் மட்டும் 6 காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சிலர் எங்கே என்பது தற்போது வரை தெரியவில்லை. மேலும் சட்டபிரிவு 174ன் படி மர்மமான முறையில் இறப்பு அல்லது தற்கொலை என்ற பிரிவில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மையத்தில் தகன மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு எதிரான வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால், தகன மேடை தற்போது செயல்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஈஷா மையத்தின் மையத்தின் மருத்துவர் ஒருவர் போக்சோ வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று பழங்குடியினருக்கு சொந்தமான நிலத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

மேலும் ஈஷா யோகா மையம் நடத்தும் மருத்துவமனையில் காலாவதியான மருத்துவ உபகரணங்கள் இருப்பதாகவும் தமிழக காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இப்படி காவல்துறை ஈஷா யோகா மையத்தின் மீது வைத்துள்ள அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் நடைபெறும் வழக்கு விசாரணை  அனைவர் கவனத்தையும் இந்த வழக்கின் பக்கம் திருப்பி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram