வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!

Continues below advertisement

மேற்கு வங்கத்தில் போலீஸ் என்று தெரியாமல் மஃப்டியில் இருந்த பெண் போலீஸிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை அவர் சட்டையைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கம் மாநிலம் கர்தா நகரில், இருசக்கர வாகனத்தில் சாப்பாடு, பொருள்கள் போன்றவற்றை டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், தெருவில் ஒரு பெண்ணிடம் ஆபாச சைகைகளைக் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பெண் மஃப்டியில் இருந்த லேடி கான்ஸ்டபிள். இதுதெரியாமல் அப்பெண்ணிடம் டெலிவரி ஊழியர் தொடர்ந்து ஆபாச சைகைகளைக் காட்டியுள்ளார்.

இதனால், அந்த லேடி கான்ஸ்டபிள் உடனே துணிச்சலாக டெலிவரி ஊழியரின் சட்டையைப் பிடித்து அருகிலிருந்த கர்தா காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார். மேலும் அந்த டெலிவரி கைதுசெய்யவும் முறைப்படி வைத்தார்.

இவரின் இத்தகைய துணிச்சலான செயலானது, நாள்தோறும் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

லேடி கான்ஸ்டபிளின் துணிச்சலை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola