Basti ward boy | ஆப்ரேஷன் செய்த வார்டு பாய்நிர்வாணமாக கிடந்த பெண் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வார்டு பாய் பெண் ஒருவரை நிர்வாணமாக படுக்கவைத்து அறுவை சிகிக்கை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைதத்துள்ளார். மேலும் அந்த வார்டு பாய், தான் அறுவை சிகிச்சை செய்ததை வீடியோவாகப் பதிவுசெய்து அதனைத் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸில் வைத்ததையடுத்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஹர்தியாவில் அமைந்துள்ள பஸ்தி கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கண் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வார்டு பாய் பெண் ஒருவரை நிர்வாணமாக படுக்கவைத்து அறுவை சிகிக்கை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைதத்துள்ளார். மேலும் அந்த வார்டு பாய், தான் அறுவை சிகிச்சை செய்ததை வீடியோவாகப் பதிவுசெய்து அதனைத் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக, மக்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நெருக்கடிக்கு மத்தியில், அந்த வார்டு பாய் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது, ஆபரேஷன் தியேட்டரில் அந்த பெண் நிர்வாணமாக கிடந்ததும் மருத்துவர்களுக்கு வார்டு பாய் உதவி செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மருத்துவமனையின் இயக்குநராக உள்ள சஞ்சய் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வார்டு பாய் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் சஞ்சய் குமார் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளது. வார்டு பாயின் செயலுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. குற்றவாளிகளை தப்பிக்கவிட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவ அதிகாரியை (எம்ஓஐசி) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.எந்த வித அலட்சியத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், குற்றவாளிகள் தங்கள் இழிவான செயலுக்கு கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.