நொறுக்கி தள்ளிய இந்தியா எங்களால சமாளிக்க முடியலஒத்துக் கொண்ட பாகிஸ்தான்
இந்தியா கொடுத்த அடியை தாங்க முடியாமல் அமெரிக்காவிடம் ஓடி உதவி கேட்டத்தை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியது. அதன்பிறகு பாகிஸ்தான் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த இந்தியா ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் நொறுன்கின.
இறுதியில் 2 நாடுகளும் சேர்ந்து போர் நிறுத்தத்திற்கு ஒத்து வந்தன. அமெரிக்கா தலையிட்டு தான் போரை நிறுத்தியது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி வருவதும் சர்ச்சையாகி வருகிறது. ட்ரம்ப் சொன்னதை கேட்டு முடிவெடுக்கவில்லை என இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தநிலையில் விமானப்படை தளங்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதே, போர் நிறுத்த முடிவுக்கு காரணம் என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பஞ்சாபில் உள்ள ஷோர்கோட் ஏர்பேஸ் இரண்டுமே இந்தியாவால் தாக்கப்பட்ட போது இந்த விவகாரத்தில் தலையிடும்படி அமெரிக்காவின் உதவியை கேட்டோம். துரதிருஷ்டவசமாக அதிகாலை 2.30 மணியளவில் இந்தியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அடுத்த 45 நிமிடங்களில் சவுதி இளவரசர் ஃபைசல் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரிடம், நான் ஏற்கனவே அமெரிக்க உள்துறை அமைச்சரிடம் பேசியிருந்ததை தெரிவித்தேன். தொடர்ந்து, இந்தியா தாக்குதல்களை நிறுத்தினால் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளது என்பதை, ஜெய்சங்கரிடம் தெரிவிக்கவா என ஃபைசல் கேட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவே, போர் நிறுத்த விவகாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெரியப்படுத்தினார் என பாகிஸ்தான் சரணடைந்ததை துணை பிரதமர் ஒப்புக் கொண்டார்.
ஆரம்பத்தில் இந்தியாவுக்கு தரமான பதிலடி கொடுத்து விட்டோம் என காலர் தூக்கி வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீபும் அதன்பிறகு உண்மையை சொல்ல ஆரம்பித்தார். பிரமோஸ் ஏவுகணை வைத்து இந்தியா நடத்திய தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதை பாகிஸ்தானே சொல்லிவிட்டது.