Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?

துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இச்சூழலில் தான் இவரது திடீர் ராஜினாமாவிற்கு பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மாநிலங்களவையை மாலை வரை துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் தான் தலைமை தாங்கி வழி நடத்தினார். இச்சூழலில் தான் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று இரவு தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர். இது டெல்லி அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் குடியரசுத்தலைவருக்கு அளித்த கடிதத்தில் உடல் நலக் குறைவால் பதவியை ராஜினாம செய்வதாக அறிவித்தார். 

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்கட்சிகள் உண்மை காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று பாஜகவை கேள்விகளால் துளைத்து வருகிறது. அதேபோல், பாஜக மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபடு காரணமாகத்தான் அவர்களின் அழுத்ததால் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என்று குற்றம் சாட்டி வருகின்றன எதிர்கட்சிகள்.

அதே நேரம் அவருக்கு உண்மையாக உடல் நலக் குறைவு இருக்கிறது என்றால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே ராஜினாம செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பி வருகின்றன. பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு கூட  துணை குடியரசுத்தலைவர் ராஜினாமா குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக நீதித்துறையில் ஏற்பட்ட ஊழல் தொடர்பகவும், நீதிபதி சேகர் யாதவ் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கு பெற்ற போது அவரை நீக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் தீர்மானம் கொண்டுவந்தது . இந்த தீர்மானத்தை நிரகரிக்க வேண்டும் என்று பாஜக தரப்பு ஜெகதீப் தன்கருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தான் ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது பாஜக என்கிறனர் விவரம் அறிந்தவர்கள்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola