”எங்களுக்கு ஓட்டு போட்டீங்களா” பிளேட்டை திருப்பிய அமைச்சர் I.N.D.I.A-ஐ வம்பிழுக்கும் பாஜக

பற்றி எரியும் நாடாளுமன்றம்..பிரதமர் ராஜினாமா..ராணுவ ஆட்சி என உலகையே உலுக்கியுள்ள நேபாள் ஜென் சீ போராட்டத்தின் தூணாக இருப்பவர் தான் சுதன் குருங்..

கடந்த செப்டம்பர் 5 நேபாள் அரசு சில சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து நேபாளை சேர்ந்த இளைஞர்களின் கோபத்திற்கு ஆளானது. அதன் விளைவாக தற்போது நேபாளத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது..

ஊழல், நெபோடிசம், லஞ்சம் இவற்றிற்கு எதிராக வீதிகளில் போராட்டம் செய்த மாணவர்களை போலீசார் சுட்டுக்கொன்றதால் ஜென் சி எனும் இளம்தலைமுறையினர் வன்முறையில் இறங்கினர். இதனையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை..

நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் சர்மா ஒலியின் வீடு அமைச்சர்களின் வீடு என அனைத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். உயிருக்கு பயந்து பிரதமரும் அமைச்சர்களும் வீதியில் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக நேபாள் பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்கள் தடையும் நீக்கப்பட்டது..எனினும் நேபாளம் கலவர பூமியாகவே தற்போது இருந்து வருகிறது. ராணுவம் நிலைமையை சீர் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது..

இந்நிலையில் நேபாளத்தின் ஆட்சியையே கவிழச்செய்த இந்த ஜென் சி போராட்டத்தின் பின்னணியில் ஒற்றை முகமாக சுதன் குருங் என்பவர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் தனது  மகனை இழந்தார் இந்த சுதன் குருங். மகனின் நினைவாக பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ஓர் அமைப்பை தொடங்கினார் சுதன்.. அந்த அமைப்பின் பெயர் தான் ஹமி நேபாள். இந்த தலைமுறையினரின் குமுறல்களை வெளிப்படுத்து ஒரு ப்ளாட்ஃபாமாக இருக்கும் சோசியல் மீடியாக்களில் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அவர்களின் பிரச்சனைகளை சரி செய்து வருகிறார் சுதன் குருங். 2019 துருக்கி நிலநடுக்கத்தின் போது மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து உலகளவில் பேசப்பட்டது. 

இந்நிலையில் தான் தற்போது நேபாளத்தில் எழுந்துள்ள அவலத்திலும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் சுதன் குருங். போராட்டம் நடத்தலாம் வாங்க என மாணவர்களுக்கு இவர் விடுத்த ஒற்றை வீடியோ அழைப்பு தான் நேபாள் ஜென் சியை களத்திற்கு வரவழைத்துள்ளது என்கின்றனர். இவரது பேச்சைக்கேட்டு தான் மாணவர்கள் ஒன்று திரண்டுள்ளனர், அனைவரும் சீருடையில் வரவேண்டும், கையில் புத்தகங்களுடன் வரவேண்டும் என கூறியுள்ளார். அமைதியான முறையில் போராட்டம் செய்வதே இவர்களின் நோக்கம் என கூறப்படுகிறது. ஆனால் அரசின் கொடூரபோக்கு இன்று நேபாள் முழுக்க பற்றி எரிய செய்துவிட்டது..

அதே நேரத்தில் சாதாரன தன்னார்வலரின் பேச்சைக்கேட்டு எப்படி இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் போராட்டத்தில் குதித்தது இதன் பின்னணியில் வேறு காரனங்கள் ஏதேனும் உள்ளதா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola