Uttarakhand iPhone theft : ஐ-போனை ஆட்டைய போட்டு பாஸ்வேர்ட் வேற கேக்குற திருடனால் ஷாக்கான பெண்

Continues below advertisement

மொபைல் போனை திருடிவிட்டு பாஸ்வேர்ட் கொடு என மெசேஜ் செய்த திருடன் - போலீசால் திருடனை ஒன்றும் செய்ய முடியாது - மொபைல் போனை தொலைத்த பெண் வெளியிட்ட வீடியோ.

செப்டம்பர் 12ம் தேதியன்று, டேராடூனில் கௌஷிகி தியானி என்பவரின் ஐபோன், அவரது நண்பர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பலரின் மடிக்கணினிகள், மேக்புக்குகள் உட்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஒரே நாளில் திருடப்பட்டன.

இச்சம்பவத்தில், ஐபோனை திருடிய நபர், பாதிக்கப்பட்ட கௌஷிகியை வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு போனின் பாஸ்கோடை (Password) தருமாறு கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

ஆனா இப்ப இது வெறும் போன் திருட்டு பிரச்சனை மட்டும் இல்லை. அதே திருடன் மெசேஜ் அனுப்பி பாஸ்கோட் கேட்குறான், தொடர்ந்து போலியான எஸ்.எம்.எஸ் (SMS) அனுப்புறான். யோசிச்சு பாருங்க, போனை திருடுன அப்புறமும் இந்த மாதிரி மெசேஜ் அனுப்புற அளவுக்கு அந்த திருடனுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? பிடிபடுவோம்ற பயமே அவனுக்கு இல்லை, ஏன்னா உத்தரகாண்ட் காவல்துறையால தன்ன ஒன்னும் செய்ய முடியாது, அவங்களால தன்ன பிடிக்கவே முடியாதுன்னு அவனுக்கு நல்லா தெரியும். அதனாலதான் அவன் சுதந்திரமா சுத்திட்டு இருக்கான்.


காவல்துறையில் புகாரளிக்கச் சென்றபோது புகார்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திருடனால் தைரியமாகத் தொடர்புகொள்ள முடிகிறது என்றும் கௌஷிகி குற்றம் சாட்டியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola